தேசத்தின் முதல் அதிபர் ராஜேந்திர பிரசாத் முதல், பதிமூன்றாவது அதிபரான பிரணாப் முகர்ஜி வரை வசித்து புகழ் சேர்த்த அரண்மனை இது. 1931- ல் அன்று வைஸ்ராய் பதவி வசித்த லார்டு இர்வின் (இர்வின் பிரபு) தான், இம்மாளிகையில் முதன் முதலாகக் குடியேறிக் கோலோச்சியவர்.
இது அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகையை விடவும் பெரியது; அழகு மிகுந்தது என்பார்கள். இரண்டு லட்சம் சதுர அடி பரப்பளவைக் கொண்டது. அதனுள் உள்ள அழகிய அறைகள் 360 ஆகும். அன்று இதனைக் கட்டி முடிப்பதற்கு ஆன மொத்த செலவு ரூபாய் ஒரு கோடியே 40 லட்சம். அன்று இது மிகப்பெரிய தொகை.
இந்த அழகிய மாளிகையை வடிவமைத்த கட்டடக் கலைஞர் எட்வின் லூட்டென்சால் என்ற பெருமகன்.
ராஷ்டிரபதி பவனில் ஒரு சிறிய திரை அரங்கம், நான்கு டென்னிஸ் கோர்ட்டுகள், கிரிக்கெட் மைதானம், போலோ கிரவுண்ட், கோல்ப் கோர்ஸ் ஆகியவையும் உண்டு. அதிபர் மாளிகையின் சிற்றரங்கில் அங்குள்ள பணியாளர்களுக்கு அவ்வப்போது இந்திப்படங்கள் திரையிடப்படுவதுண்டு. குறிப்பாக தேசிய விருது பெற்ற படங்களை அதிபரின் குடும்பத்தாருக்காக அங்கு திரையிடுவார்கள்.
அதிபர் மாளிகைக்கு அங்கு வருவோரின் மனதைக் கவரும் பகுதி 'மொகல் கார்டன்ஸ்' என்ற பூந்தோட்டம். அங்கு வண்ண வண்ண மலர்கள் நம்மை மகிழ்விக்கும். அதன் வாசனையோ நம்மை மயக்கும்! தில்லியின் வசந்த காலத்தில் அங்குள்ள அழகு அழகான செடிகளையும், அவற்றில் பூத்துக்குலுங்கும் பல வண்ண மலர்களையும் பார்த்துக் கொண்டே அப்பூங்காவில் நடப்பது ஓர் இனிய அனுபவம்.
அதிபர் மாளிகையை மட்டுமல்ல, நாடாளுமன்றம், சவுத் பிளாக், நார்த் பிளாக், இந்தியா கேட், கனாட் ப்ளேஸ், ஜிம்கானா கிளப், மாடர்ன் ஸ்கூல், அகில இந்திய வானொலி நிலையம் போன்ற பல புகழ் பெற்ற கட்டடங்களைக் கட்டிய காண்ட்ராக்டர் ஒரு இந்தியரே! அவர் தான் ஸர். சோபாசிங். அதிகம் படிப்பறிவில்லாதவர் என்றாலும், தொழிலில் அபாரத் திறமை கொண்டவர் எனப் பெயர் எடுத்தவர். இவர் நாடறிந்த, புகழ் பெற்ற எழுத்தாளர் குஷ்வந்த் சிங்- ன் தந்தை என்பது குறிப்பிடத்தக்கது.
அதிபர் மாளிகையில் அதிக காலம் வசித்தவர் என்ற சிறப்பு பெற்றவர் பாபு ராஜேந்திர பிரசாத். இடைக்கால அரசு பதவி வகித்த 2 ஆண்டுகளும் (1950 - 1952), அதனைத் தொடர்ந்து 2 முறை அதிபராகி 10 ஆண்டுகளும் (1952 - 1962) சேர்த்து மொத்தம் 12 ஆண்டுகள் அங்கு வாசம் செய்தவர் இவரே.
மூன்றாவது முறையும் அவர் போட்டியிட விரும்புகிறார் என்ற தகவல் கசிந்தது. அதனைத் தடுப்பதற்காக வென்றே 'குடியரசுத் தலைவர் பதவிக்காலம் இரண்டு முறைக்கு மேல் நீடிக்கக்கூடாது' என்ற தனிநபர் அரசியல் சட்டத்திருத்தத் தீர்மானம் 18.08.61 அன்று கொண்டு வரப்பட்டது.
அதிபராக இருந்த டாக்டர் ராதாகிருஷ்ணனுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் தென்னிந்திய உணவு தயாரிக்க தமிழர் ஒருவர் கிடைத்தாராம். அவரது மாதிரி சமையலைச் சாப்பிட்டுப் பார்த்து 'பிரமாதம், அற்புதம்' என்று பாராட்டினாராம் அதிபர். அன்று முதல் அவர் பதவி விலகும் வரை அம்மாளிகையில் இட்லி, பொங்கல், வடை தோசை போன்ற தென்னிந்திய உணவு வகைகள் கிடைத்ததாம்.
மிகமுக்கியமான அல்லது மிகப்பிரபலமான நபர்களை அதிபர் சிற்றுண்டிக்கு அழைப்பதுண்டு. அவ்வாறு தமிழ் நாட்டிலிருந்து வந்தவர்களில், அதிகமான அதிபர்களைச் சந்தித்தவரும், அவர்களுடன் அமர்ந்து சிற்றுண்டி அருந்தியவரும் புகைப்படம் எடுத்துக் கொண்டவரும் யார் என்றால், அநேகமாக சிவாஜி கணேசனாகத்தான் இருப்பார் என்று ஒரு பதிவும் உண்டு.
ஆரம்ப காலத்தில் தில்லியிலிருந்து வெளிவரும் முக்கிய ஆங்கில நாளிதழ்களான இந்துஸ்தான் டைம்ஸ், ஸ்டேட்ஸ்மென், இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆகியவற்றில் 'அதிபர் மாளிகைச் செய்தி' (Rashtrapathi Bhavan Communique) என்ற தலைப்பில் முந்தைய நாள் அதிபரைச் சந்தித்தவர்களின் பெயர்கள் வெளியிடப்படும்.
அப்படி அதிபரைச் சந்தித்தவர்கள் அனைவரும், தங்கள் பெயர் அப்பட்டியலில் இருக்கிறதா என்று ஆவலோடு பார்ப்பார்களாம். தங்கள் பெயர் இருந்தால், அப்பகுதியை வெட்டி எடுத்து, பத்திரமாக வைத்துப் பாதுகாக்கும் பிரமுகர்களும் உண்டு என்பார்கள். இப்பழக்கம் ஜாகீர் உசேன் இறந்தபின் நிறுத்தப்பட்டுவிட்டது.
பிரதமர் இந்திரா காந்தியால் முன்னிறுத்தப்பட்டு, அவரது ஆதரவால் 13.07.1982 அன்று ஏழாவது குடியரசுத் தலைவராக அமர்ந்தார் ஜைல் சிங். 1984 நவம்பரில் இந்திரா காந்தி தனது பாதுகாவலர்களாலேயே சுடப்பட்டு மரணமடைந்த போது, 'ஆளும் காங்கிரஸின் எம்.பி.க்கள் தங்கள் தலைவரைத் தேர்ந்தெடுக்கும் வரை, நான் காத்திருக்க வேண்டியதில்லை.
நெருக்கடியான சூழலில் பிரதமரை நியமிக்கும் உரிமையும், அதிகாரமும் எனக்கு இருக்கிறது. அதற்குள்ள ஒரே நிபந்தனை, என் நியமனத்தை மக்களவை அங்கீகரிக்க வேண்டும்' என்று உறுதி படச்சொல்லி ராஜீவ் காந்திக்குப் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார் ஜைல் சிங்.
ஒன்பதாவது குடியரசுத் தலைவராகப் பொறுப்பேற்று அதிபர் மாளிகையில் அமர்ந்தவர் சங்கர்தயாள் சர்மா (1992 ஜூலை முதல் 1997 ஜூலை வரை).
1996 பொதுத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. அந்நிலையில் 'மக்கள் தெளிவான முடிவை அளிக்கவில்லை! எவருக்கும் பெரும்பான்மை பலம் இல்லை.
இருப்பினும் இருப்பவர்களில் எவருக்கு கணிசமான பலத்தை மக்கள் வழங்கியிருக்கிறார்கள் என்பதைக் கணிப்பதற்கும், அக்கட்சித் தலைவரை அரசு அமைக்க அழைப்பதற்கும் எனக்கு அதிகாரத்தை விதி 75 (1)- ல் வழங்கியுள்ளது' எனப் பதிவு செய்தார். பா.ஜ.க.வை பதவி ஏற்க அழைத்தார் எஸ்.டி.சர்மா.
அதிபர் சர்மாவின் மகள் கீதாஞ்சலி மக்கான். அவரது கணவர் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த லலித் மக்கான். இந்திரா காந்தி கொலைக்குப் பிறகு நடந்த சீக்கியப் படுகொலைக்குக் காரணமானவர்களில் லலித் மக்கானும் ஒருவர் எனக் கருதப்பட்டு, காலிஸ்தான் தீவிரவாதிகள் லலித் மக்கான் - கீதாஞ்சலி மக்கான் தம்பதியை சுட்டுக் கொன்றார்கள்.
ஒவ்வோர் அதிபரைப் பற்றியும், பல நகைச்சுவைத் துணுக்குகள் செய்திகளாக அதிபர் மாளிகையிலிருந்து வருவதுண்டு. அவை உண்மையா, அல்லது மிகையானதா எனத் தெரியாது. ஆனால் அவை சுவையானதாக இருக்கும்!
பாகிஸ்தான் அதிபர் யாஹ்யா கான், இந்திய அதிபர் ஜைல் சிங்- ஐ சந்தித்தார். கலந்துரையாடலின்போது, யாஹ்யா கான் ஜைல் சிங்- கிடம் 'உங்களைப் போல் எந்த அதிகாரமும் இல்லாத ஒருவர் எங்கள் நாட்டில் இருக்கிறார். அவர் தான் எங்கள் பிரதமர்' என்றார்.
அதன் மூலம் பாகிஸ்தான் ஜனாதிபதியான தான் அனைத்து அதிகாரமும் படைத்தவர் என்பதைக் சுட்டிக் காட்டினார்.
உடனே ஜைல் சிங் 'என் பதவிக் காலம் எனக்குத் தெரியும்; என்று ஓய்வு பெறுவேன் என்பதும் எனக்குத் தெரியும், ஆனால் உங்கள் பதவிக் காலம் உங்கள் கையில் இல்லை! ராணுவத்தின் கையில் அல்லவா உள்ளது?' என்று சுருக்கென்று பதில் சொன்னார்.
இதுவரை இந்தியாவின் குடியரசுத் தலைவராகப் பதவி வகித்தவர்கள் பதிமூன்று பெருமக்கள். அவர்களில் 12 ஆண்டுகாலம் தொடர்ந்து பதவி வகித்தவர் ராஜேந்திர பிரசாத் ஒருவரே.
ஐந்தாண்டு காலம் முழுமையாகப் பதவி வகித்தவர்கள் டாக்டர் ராதாகிருஷ்ணன், வி.வி.கிரி, சஞ்சீவ ரெட்டி, ஜைல் சிங், ஆர்.வெங்கட்ராமன், சங்கர்தயாள் சர்மா, கே.ஆர். நாராயணன், ஏ.பி.ஜெ. அப்துல் கலாம், பிரதிபா பாட்டீல், பிரணாப் முகர்ஜி ஆகிய பத்து பேர். பதவிக்காலம் முடியும் முன்பே இறந்துபோனவர்கள் ஜாகீர் ஹுசைன், பக்ருதீன் அலி அகமது ஆகிய இருவர்.
முன்பெல்லாம் துணை ஜனாதிபதியாகப் பதவி வகித்தவர்கள், குடியரசுத் தரைவராகப் பதவி உயர்வு பெறுவது எழுதப்படாத விதியாகக் கடைப்பிடிக்கப்பட்டு வந்ததுண்டு. அந்த விதி விலகியதால், அதிபர் மாளிகையில் குடியரசுத் தலைவராக அமரும் வாய்ப்பை இழந்த பெருமக்கள் ஜி.எஸ். பாதக், பி.டி. ஜாட்டி, இதயதுல்லா, கிருஷ்ணகாந்த், பி.எல்.- ஷெகாவத் ஆகியோர்.
குடியரசுத் தலைவர் பதவி வகிப்பதற்கு அறிவாற்றல், ஆளுமைத்திறன், அரசியல் அனுபவம், நுண்ணிய சட்ட அறிவு, நடுநிலை தவறாத குணம், அரசியல் அமைப்புச் சட்டத்தை நிலை நாட்டும் துணிவு, தேசநலன் சார்ந்த தொலைநோக்குப்பார்வை, அயல்நாட்டுத் தலைவர்களுடன் நட்புணர்வை வளர்க்கும் தகைமை ஆகிய அனைத்துப் பெருங்குணங்களும் நிறைந்தவர்களே பொருத்தமானவர்கள்.
தற்போது குடியரசுத் தலைவருக்கான தேர்தல் களத்தில் இருப்பவர்கள் இருபெரும் தகைமையாளர்கள். இருவரில் எவர் அதிபர் மாளிகையில் அமர்ந்து, ஆட்சி நடத்தப்போகிறார் என்கிற கேள்வியோடு இந்திய தேசமே ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருக்கிறது.
விரைவில் கிடைத்துவிடும் விடை

Source: Dinamani
முதல் குடிமகனின் மாளிகை!
By முனைவர் அ. பிச்சை | Published on : 13th July 2017 01:31 AM |
No comments:
Post a Comment