1984 சீக்கியர் கலவரம்
நூலாசிரியர்: ஜெ. ராம்கி
நூலாசிரியர்: ஜெ. ராம்கி
நூல் வகை: வரலாறு, சரித்திரம்
நூல் குறிப்பு:
ஆயிரக்கணக்கானோர் மிகக் கொடூரமான முறையில் கொல்லப்பட்டனர். பல்லாயிரக்கணக்கானோரின் வீடுகள் கொள்ளையடிக்கப்பட்டன. ஒருவரை அழிப்பதற்கு அவர் ஒரு சீக்கியராக இருப்பதே போதுமானதாக இருந்தது.
இந்திரா காந்தி சீக்கியர்களால் கொல்லப்பட்டது கலவரத்துக்கான காரணம் என்றால் இந்திரா காந்தி கொல்லப்பட்டதற்குக் காரணம் சீக்கியர்களின் புனித வழிபாட்டு இடமான பொற்கோவில் ராணுவத்தால் தாக்கப்பட்டதுதான். இந்தப் புத்தகத்தின் மையம் 1984 சீக்கியர் கலவரம் என்றாலும் பஞ்சாப் குறித்த ஒரு தெளிவான அறிமுகம், பிந்தரன்வாலேவின் எழுச்சி, ஆபரேஷன் புளூ ஸ்டார், இந்திரா காந்தி படுகொலை, ராஜிவ் காந்தியின் சர்ச்சைக்குரிய நிலைப்பாடு என்று ஒரு விரிவான அரசியல் பின்னணியையும் அளிக்கிறது. இதிலிருந்து நாம் அவசியம் பாடம் படித்தே தீரவேண்டும்.
No comments:
Post a Comment