நாம் காணும் கனவுகளைப் புரிந்து கொள்வதற்கு அறிவியல்பூர்வமான அடிப்படையைக் கண்டடைந்தவர் உலகப் புகழ்பெற்ற அறிஞர் சிக்மெண்ட் ப்ரைட். கனவுகளின் விளக்கம் என்ற இவரது பிரசித்தி பெற்ற நூலின் சுருக்கமான வடிவம் இது. ப்ரைட் ஆய்வின் மூலம் கண்டறிந்து கூறும் விளக்கங்கள் உண்மையில் அதிர்வூட்டுபவை. கனவுகளை இப்படியெல்லாம் பகுத்து அறியமுடியுமா என்கிற வியப்பைத் தரும் பக்கங்களே இந்தநூலில் அதிகம். `சைகோ அனலிசிஸ்' என்னும் உளப்பகுப்பாய்வு முறையைப் பிரயோகித்து எழுதப்பட்டுள்ள இந்தநூலை நாகூர் ரூமி தனது தேர்ந்த எளிய மொழி நடையால் வாசகப்புரிதலுக்கு இலகுவாக்குகிறார். முற்றுப்புள்ளி என்றும் கடைசி அத்தியாயத்தில் அறிஞர் பிராய்டின் விளக்கங்களை விமர்சனத் தொனியில் நாகூர் ரூமி எழுதிப்பார்ப்பது சிறப்பு.
Saturday, November 3, 2018
கனவுகளின் விளக்கம்- Pdf download
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment